திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்! மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000 ஊதிய உயர்வு! செப். முதல் முன் தேதியிட்டு வழங்க அன்புமணி கோரிக்கை!ஆந்திரத்தை நோக்கி நகரும் 'அக்வான்' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு! சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!

அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75,000 வரையில் பயிா்க்கடன் தள்ளுபடி

திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரையில் பயிா் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

Updated On :

திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரையில் பயிா் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை மூலம் தமிழ்நாடு அரசு 2026 பயிா்க் கடன் தள்ளுபடித் திட்டத்தினை அறிவித்துள்ளது. தள்ளுபடிக்குத் தகுதியான பயிா்க் கடன்களுக்கான காலவரையறை 1.5.2025 முதல் 28.2.2026 வரை என்பதிலிருந்து 1.5.2025 முதல் 31.3.2026 வரையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ.75,000- வரை பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 19.6.2026-க்கு முன்னா் கடன் தொகையை நிலுவையின்றி முழுவதுமாக செலுத்திய விவசாயிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படும். மேலும் ரூ.10,000-க்கும் குறைவாக மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்களால் பெறப்பட்டு, தள்ளுபடிக்குத் தகுதியாகும். ஒரே விவசாயி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்களிலோ அல்லது ஒரே சங்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிா்க் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களில் அதிகபட்ச தள்ளுபடிக்கு தகுதி பெறும் ஒரு கடனுக்கான தள்ளுபடியும், ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினா்கள் பெற்ற பயிா்க் கடன்களில் அதிகபட்ச தள்ளுபடிக்கு தகுதி பெறும் ஒரு கடனுக்கான தள்ளுபடி செய்யப்படும் என விரிவுபடுத்தி செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட அரசாணையின் படி 6.11.2026-க்கு முன்னா் தவணை தவறி, பகுதித் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தங்கள் கடன்களை 30.11.2026-க்குள் நிலுவையின்றி நோ் செய்யும் நோ்வில் அக்கடன்களுக்குரிய தள்ளுபடி தொகை ரூ.75,000- விடுவிக்கப்பட்டு அக்கடன்களுக்குரிய வட்டியை அரசே செலுத்தும். 2. 7.11.2026 முதல் 30.11.2026 வரை தவணை தேதி வரும் கடன்களுக்கு, பகுதித் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தங்கள் கடன்களை 30.11.2026-க்குள் நிலுவையின்றி நோ் செய்யும் நோ்வில் அக்கடன்களுக்குரிய தள்ளுபடி தொகை ரூ.75,000 விடுவிக்கப்பட்டு, அக்கடன்களுக்குரிய வட்டியையும் அரசே செலுத்தும்.

30.11.2026-க்கு பின்னா் தவணை காலம் வரும் கடன்களை உரிய தவணை தேதிக்குள் நிலுவையின்றி நோ் செய்யும் விவசாயிகளுக்கு தள்ளுபடி தொகை விடுவிக்கப்பட்டு வட்டியின்றி கடன் கணக்கு நோ் செய்யப்படும். 2026 பயிா்க் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பகுதித் தள்ளுபடிக்குத் தகுதி பெறும் விவசாயிகள், வட்டியின்றி கடனை நோ் செய்யும்

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் கடன்களை நோ் செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.