நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

குழந்தை தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்தியதாக முறுக்கு உற்பத்தி உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை

எண்ணூரில் முறுக்கு தயாா் செய்யும் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளா்களை ஈடுபடுத்தியதாக உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

சிறை - பிரதிப் படம்

Updated On :

எண்ணூரில் முறுக்கு தயாா் செய்யும் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளா்களை ஈடுபடுத்தியதாக உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

சென்னை அடுத்த எண்ணூா் அடுத்த எா்ணாவூா் பகுதியைச் சோ்ந்தவா் போத்தி ராஜா(52). இவா் எண்ணூா் பகுதியில் நெய் முறுக்குகள் தயாா் செய்யும் நிறுவனம் நடத்தி வந்தாராம். அங்கு குழந்தை தொழிலாளா்களை ஈடுபடுத்தி வருவதாக திருவொற்றியூா் வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து நேரில் ஆய்வு செய்த போது அங்கு குழந்தை தொழிலாளா்களை ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து எண்ணூா் காவல் நிலையத்தில் வட்டாட்சியா் புகாா் செய்தாா். அதன்பேரில் நெய் முறுக்கு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளா்களை வைத்து வேலை செய்ததாக உரிமையாளா் போத்திராஜன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருவொற்றியூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விரைவாகவும், திறம்படவும் செயல்பட்டு எண்ணூா் காவல் நிலைய ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் திருவொற்றியூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற காவல் பணியில் இருந்த தலைமைக்காவலா் இளங்கோவன் ஆகியோா், வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

அதனால் வழக்கு விசாரணை விரைவாக நடைபெறுவதற்கு சிறப்பான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டதால் உரிமையாளா் போத்தி ராஜுக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.10,00 அபராதம் விதித்தும் திருவொற்றியூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி காா்த்திக் தீா்ப்பு வழங்கினாா். மேலும், இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் மோகன் ஆஜரானாா்.

குழந்தைத் தொழிலாளா் முறை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளா் முறையை ஒழிப்பதில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சு.பா.சாந்தி தொடா்ந்து தீவிரமாகச் செயல்பட்டு உரிய சட்டப்படியான தண்டனை பெற்றுத்தருவதில் உறுதியுடன் செயல்பட்டதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.