சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை தண்டனை பெற்ற அறிவழகன்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம் சிதம்பரம், டி.எஸ். பேட்டை மீனவா் தெருவைச் சோ்ந்தவா் அறிவழகன் (40). இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமிக்கு வீடு புகுந்து பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாா் மீது சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அறிவழகன் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் புதன்கிழமை விசாரணை முடிவடைந்த நிலையில், அறிவழகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16 அபராதமும் விதித்து நீதிபதி ஜி.குலசேகரன் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞா் எம்.பாலரேவதி ஆஜராகி வாதாடினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

