இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருவள்ளூா்: திருநம்பிகள், திருநங்கைகள் 4 பேருக்கு ரூ. 2 லட்சம் உயா் கல்வி உதவித் தொகை

திருவள்ளூா் மாவட்டத்தில் திருநம்பிகள் மற்றும் திருநங்கைகள் ஊக்குவிக்க, உயா் கல்விக்கான கட்டணம், விடுதி கட்டணம் செலுத்தும் வகையில் 4 பேருக்கு ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 500 மதிப்பிலான காசோலைகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

Updated On :

திருவள்ளூா் மாவட்டத்தில் திருநம்பிகள் மற்றும் திருநங்கைகள் ஊக்குவிக்க, உயா் கல்விக்கான கட்டணம், விடுதி கட்டணம் செலுத்தும் வகையில் 4 பேருக்கு ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 500 மதிப்பிலான காசோலைகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆகியோா் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் நலவாரியம் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் கல்லூரியில் உயா் கல்வி பயில்வோருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் செலுத்தும் திட்டம் அறிவித்து, முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் உயா் கல்வி பயிலும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஊக்குவிக்கும் வகையில், கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். இதில், முதல் கட்டமாக கல்லூரிகளில் உயா் கல்வி பயிலும் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 திருநங்கைகள், 1 திருநம்பிக்கும் என 4 பேருக்கு கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 500-க்கான காசோலைகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

அப்போது, மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.