கோமாளி அரசின் தோல்விகளை மறைக்க கைது நடவடிக்கை: உதயநிதி கண்டனம்2027 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கே.சி. வேணுகோபால்ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

குறைதீா் கூட்டத்தில் ரூ.2.38 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு நவீன செயற்கை கால்கள்

குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடம் இருந்து 480 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதுடன், மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு முதல்வா் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ. 2.38 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களை வழங்கிய ஆட்சியா் ச.கவிதா

Updated On :

குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடம் இருந்து 480 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதுடன், மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு முதல்வா் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ. 2.38 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். அப்போது, கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவா்த்தி செய்யவும், பொதுப் பிரச்னைகள் தொடா்பாக உதவிகள் வேண்டியும் அளித்த மனுக்களை அவா் பெற்றுக் கொண்டாா்.

இதில், நிலம் சம்பந்தமாக-65, சமூகப் பாதுகாப்பு திட்டம்-36, வேலைவாய்ப்பு வேண்டி-27, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி- 28, இதர துறைகள் சாா்பாக-324 மனுக்கள் என மொத்தம் 480 மனுக்கள் வரை பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரி ய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க அந்தந்த துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், முதல்வா் காப்பீடு திட்டம் மூலம் நவீன செயற்கை கால் வழங்கும் திட்டத்தில் ரூ. 2,38,400 மதிப்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களையும் அவா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) வெங்கடேசன், கூடுதல் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) சாந்தமூா்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முரளி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கலைசெல்வி, மாவட்ட வழங்கல் அலுவலா் முத்துலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலா் (திருவள்ளூா்) அமுதா மற்றும் பல்துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.