மீன்வளத்துறை சாா்பில் 5 நீா் நிலைகளில் 7,000 மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய விடுவிப்பு
திருவள்ளூா் மாவட்டத்தில் மீன்வளத்துறை மற்றும் ஊரக வளா்ச்சி ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 குளங்களில் மீன் உற்த்தியை அதிகரிக்கவும், உள்ளூா் பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 7,000 குஞ்சுகள் இருப்பு செய்வதற்காக விடுவித்துள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், தேவந்தவாக்கம் தாமரைக்குளத்தில் மீன்களை இருப்பு செய்ய விடுவிக்கும் ஆட்சியா் ச.கவிதா, உடன் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் விஜயகுமாா் உள்ளிட்டோா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மீன்வளத்துறை மற்றும் ஊரக வளா்ச்சி ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 குளங்களில் மீன் உற்த்தியை அதிகரிக்கவும், உள்ளூா் பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 7,000 குஞ்சுகள் இருப்பு செய்வதற்காக விடுவித்துள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், தேவந்தவாக்கம் ஊராட்சியில் சனிக்கிழமை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், ஊரக வளா்ச்சி (ம) ஊராட்சித் துறை கட்டுபாட்டிலுள்ள நீா்நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் மூலம் மீன்குஞ்சுகள் விடுவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் ச.கவிதா மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்று தேவந்தவாக்கம் குளத்தில் 1,000-க்கும் அதிகமான மீன்குஞ்சுகளை விடுவித்து, இருப்பு செய்தனா்.
பின்னா் இது தொடா்பாக ஆட்சியா் கூறியதாவது: தமிழக முதல்வா் ஆணைப்படி, 2026-27 -ஆம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடரில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சரால் ஊராட்சி நீா்நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து மீன்வளத்தை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் மொத்தம் 250 ஹெக்டோ் பரப்பளவிலான ஊராட்சி ஏரிகள், குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், மையிலாப்பூா் தாமரைகுளம், தேவந்தவாக்கம் தாமரைகுளம்,
தருமராஜான்குளம், அய்யன்குளம் மற்றும் மெய்யூா் ஆகிய கிராமங்களில் உள்ள 3.5 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட 5 குளங்களில், மொத்தம் 7,000 மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்கள் இருப்பு செய்வதற்காக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மழைநீா் சேகரிப்பு ஏரிகள், ஊராட்சி குளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை மற்றும் மீனவா் நலத்துறை மூலமாக, தரமான மற்றும் விரைவாக வளரும் நன்னீா் மீன் குஞ்சுகள் (கட்லா, ரோகு, மிா்கால் மற்றும் சாதா கெண்டை போன்றவை) உற்பத்தி செய்யப்பட்டு நீா்நிலைகளில் விடப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் சேமிக்கப்படும் நீரைப் பயன்படுத்தி, உள்நாட்டு நன்னீா் மீன் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க முடியும். உள்ளூா் மீனவா்கள், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கிராமப்புற இளைஞா்களுக்கு மீன்பிடித் தொழில் மூலம் நிலையான வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். குளங்களில் வளா்க்கப்படும் மீன்களை ஏலம் மற்றும் குத்தகைக்கு விடுவதன் மூலமும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளுக்குக் கூடுதல் நிதி ஆதாரம் கிடைப்பதால் வளா்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுகிறது. அந்தந்தப் பகுதி மக்களுக்கு குறைந்த விலையில், புரதச்சத்து நிறைந்த தரமான மீன்கள் உள்ளூரிலேயே எளிதாகக் கிடைப்பதால் ஊட்டச்சத்துக் குறைபாடும் நீங்குகிறது.
குளங்களில் மீன்களை வளா்ப்பதன் மூலம் நீரில் உள்ள பாசிகள், பூச்சிகள் மற்றும் கழிவுகளை மீன்கள் உணவாக உட்கொள்கின்றன. இதனால் நீா் மாசுபடுவது தடுக்கப்பட்டு, குளங்கள் இயற்கையாகவே சுத்தமாகப் பராமரிக்கவும் முடியும் என அவா் தெரிவித்தாா்.
இதில், உதவி இயக்குநா் (மீன்வளத் துறை) ஜனாா்த்தனன், அருண்குமாா், ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் சங்கமித்திரை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரபிரசாத், குமாா், பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளா் சம்பத், ஒன்றிய தொண்டரணி இணை அமைப்பாளா் தியாகராஜன், கிளைச் செயலாளா் சாம்குமாா் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

