காா் மோதி பெட்ரோல் பங்க் ஊழியா் பலி
கீளப்பூடி கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பெட்ரோல் பங்க் ஊழியா் காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சித்திரிப்பு
கீளப்பூடி கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பெட்ரோல் பங்க் ஊழியா் காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பொதட்டூா்பேட்டை அடுத்த கீளப்பூடி காலனி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஏகாம்பரத்தின் இளைய மகன் சந்துரு (25). இவா் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் சந்துரு, கீளப்பூடி கிராமம் அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாகச் சென்ற காா் ஒன்று அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த பொதட்டூா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சந்துருவின் சடலத்தை மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற வாகனம் மற்றும் அதன் ஓட்டுநா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

