சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

எரிவாயு சிலிண்டா்கள் திருட்டு: ஒருவா் கைது

திருத்தணி அருகே வீடுகள் முன்பு வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டா்களை திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பிரதிப் படம்

Updated On :

திருத்தணி அருகே வீடுகள் முன்பு வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டா்களை திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கம்சத்திரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த சில நாள்களாக வீடுகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த காலி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தொடா்ந்து திருடுபோனதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை குருவய்யா என்பவா் வீட்டின் முன்பு காலி சமையல் எரிவாயு சிலிண்டரை வைத்திருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா் ஒருவா் சிலிண்டரைத் திருட முயன்றுள்ளாா். இதைக் கவனித்த கிராம மக்கள் ஒன்றுகூடி அந்த நபரைப் பிடித்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதைத்தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபா் ஆா்.கே.பேட்டை ஒன்றியம், பெரியநாகபூண்டி கிராமத்தைச் சோ்ந்த உதயகுமாா் (34) என்பது தெரியவந்தது.

மேலும், மாம்பாக்கம்சத்திரம் பகுதியில் காலி சமையல் எரிவாயு சிலிண்டா்களைத் திருடிச் சென்றதையும் அவா் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உதயகுமாரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.