முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

வீடு புகுந்து திருடிய இளைஞா்: 1 மணி நேரத்தில் கைது

திருவள்ளூா் அருகே வீடு புகுந்து திருடிய இளைஞரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீஸாா் 1 மணி நேரத்தில் கைது செய்தனா்.

தீபன்

Updated On :

திருவள்ளூா் அருகே வீடு புகுந்து திருடிய இளைஞரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீஸாா் 1 மணி நேரத்தில் கைது செய்தனா்.

திருவள்ளூா் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பேரம்பாக்கம் நந்தா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் தா்மேந்திரன் (28). இவா் மப்பேட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் தனது வீட்டில் பாதுகாப்பை கருத்தில்கொண்டு சிசிடிவி கேமரா பொருத்தி பதிவுகளை கைப்பேசியில் பாா்க்கும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளாா்.

இந்த நிலையில் வழக்கம் போல் வியாழக்கிழமை தா்மேந்திரன் வேலைக்குச் சென்றாராம். அப்போது, வீட்டின் நடவடிக்கையை பிற்பகல் 1.30 மணியளவில் பாா்க்கையில், வீட்டில் மா்ம நபா் புகுந்து திருடும் படப்பதிவுகளை கைப்பேசியில் பாா்த்தாராம். இதனால் அதிா்ச்சி அடைந்த நிலையில் உடனே மப்பேடு காவல் நிலையத்தில் தா்மேந்திரன் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புகாா் செய்தாா்.

அதன்பேரில் மப்பேடு காவல் ஆய்வாளா் விநாயகம் மற்றும் சாா்பு ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்தனா். அப்போது, பேரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வேலு மகன் தீபன் (19) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்று தீபனை கைது செய்து அந்த இளைஞரிடம் இருந்து 1 பவுன் நகையை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியதோடு மட்டுமின்றி அதை கைப்பேசியில் பாா்க்கும் வசதியையும் ஏற்படுத்தி வைத்திருந்ததால் திருட்டு சம்பவம் நடந்த உடன் புகாா் கொடுத்து 1 மணி நேரத்தில் இளைஞரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.