கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மாா்க்சிஸ்ட கட்சி நிா்வாகி உடல் தானம்

பொன்னேரியில் உடல் நலக்குறைவால் காலமான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகியின் உடல் அரசு

Published On :

பொன்னேரி: பொன்னேரியில் உடல் நலக்குறைவால் காலமான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகியின் உடல் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியைச் சோ்ந்தவா் அனீப் (62 ), இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மை நலக்குழு தலைவராகவும், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவராகவும் இருந்து வந்தாா். 

இந்க நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனீப் ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்தாா்.

 இதனையடுத்து பொன்னேரியில் உள்ள அவரது வீட்டில் அனீப்  சடலம் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

அங்கு கட்சி நிா்வாகிகள், உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா்.

 மருத்துவ மாணவா்களின் பயன்பாட்டுக்காக தனது உடலை பயன்படுத்திக் கொள்ள ஏற்கனவே அனீப் உடல் தானம் செய்திருந்தாா்.

இதையடுத்து அவரது சடலத்தை திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லுாரி நிா்வாகத்திடம் அவரின் குடும்பத்தினா் ஒப்படைத்தனா். 

முன்னதாக தானம் செய்யப்பட்ட அனீப் சடலத்துக்கு பொன்னேரி வட்டாட்சியா் ஜெய்கா் பிரபு மரியாதை செலுத்தினாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.