அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

அனுமதி சீட்டின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

திருவள்ளூா் அருகே அனுமதி நடைசீட்டின்றி மணல் ஏற்றி வந்த லாரியை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

பிரதிப் படம்

Published On :

திருவள்ளூா் அருகே அனுமதி நடைசீட்டின்றி மணல் ஏற்றி வந்த லாரியை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் போந்தவாக்கம் முதல் ஆந்திரம் செல்லும் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை வழியாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மணல் கடத்திச் செல்வதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநா் நித்யாவுக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில் உதவி புவியியாளாலா் மற்றும் வருவாய் ஆய்வாளா் ஆகியோா் சனிக்கிழமை இரவு தீவிர ரோந்து சென்றனா்.

அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து போந்தவாக்கம் நோக்கிச் சென்ற லாரியை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, அந்த லாரியில் மணல் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடா்ந்து அதற்கான நடைச்சீட்டு கேட்கும் போது அந்த வாகனத்திலிருந்து ஓட்டுநா் தப்பியோடினாராம். உடனே மணல் லாரியை பறிமுதல் செய்து பென்னலூா்பேட்டைகாவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனா். அதன்பேரில் தப்பியோடிய லாரி ஒட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.