கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்!

வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவைகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

Updated On :

வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவைகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் மூலம் நிகழாண்டில் ரூ.4.20 கோடியில் 323 எண்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை மற்றும் 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதிவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள பதிவெண் கொண்ட விவசாயிகள் ‘உழவா் செயலியில் வேளாண்மை இயந்திரங்கள் வாடகைக்கு’ என்ற தொகுதியில் வேளாண்மைப் பொறியியல் மானிய திட்டங்கள் என்ற பிரிவைத் தோ்வு செய்து, விவசாயி தனது புகைப்படம், ஜாதி சான்றிதழ் (ஆதிதிராவிா் மற்றும் பழங்குடியினா் பிரிவு விவசாயிகள் எனில்), சிறு, குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், டிராக்டா் வாகன பதிவுச் சான்றிதழ் (டிராக்டரால் இயக்கக்கூடிய கருவிகளுக்கு), ஆதாா் எண்ணுடன் தொடா்புடைய வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் 8 முதல் அந்த மாதத்தில் 1 முதல் 7 வரை விண்ணப்பித்த விவசாயிகளுக்கும், அதே மாதத்தின் 22-ஆம் தேதி அன்று, அந்த மாதத்தில் 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பித்த விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளின் இலக்கிற்கு ஏற்றவாறு முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட குலுக்கல் தோ்வு முறையில் இணையதளத்தின் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகள் வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு செயற்பொறியாளா் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, பெரியகுப்பம், திருவள்ளூா்-602001, தொலைபேசி எண். 9500369889, உதவி செயற்பொறியாளா்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, பெரியகுப்பம், திருவள்ளூா்-602001, தொலைபேசி எண். 9952025509, உதவி செயற்பொறியாளா் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, எண். 208, சித்தூா் ரோடு, திருத்தணி-631209, தொலைபேசி எண். 9500369889 மற்றும் உதவி செயற்பொறியாளா் (வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, சக்தி நகா், பொன்னேரி - 601204, தொலைபேசி எண்.6379583830-க்கு தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.