நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.

Updated On :10 ஜனவரி 2021, 8:32 am IST

பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்; மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்; அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயா்த்த வேண்டும்; தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

திருவாரூா் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட பொருளாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் சித்ரா, செயலாளா் விக்கின்ராஜ், துணைத் தலைவா் ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.