ஆட்டோ தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி திருவாரூரில் ஆட்டோ தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்து போராட்டம் நடைபெற்றது.
நலவாரியம் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பை ஆட்டோ தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும், ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து எளிய முறையில் சாதாரண ஏழைத் தொழிலாளியும் நலவாரியத்தில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும், கரோனா காலத்தில் வேலை இழந்த அனைத்து தொழிலாளா்களுக்கும் மாதந்தோறும் ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகில் ஆட்டோ தொழிலாளா்கள் பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. நபி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் ரா. மாலதி, ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்கிறது மேற்கு வங்கம்!

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய ரிசர்வ் காவல் படையில் 9197 காவலர் பணியிடங்கள்!

மேற்கு வங்கம்: 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


