குடவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைக் கட்டடம் புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
திருவாரூா் மாவட்டம், குடவாசலில் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இந்நிலையில், இப்பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பெய்த வரும் கனமழை காரணமாக, பள்ளியின் ஒரு வகுப்பறை புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
தற்போது கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இயங்காத காரணத்தால், அந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பள்ளி வகுப்பறை கட்டடம் இடிந்ததை அறிந்த, திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன் மற்றும் அரசு அலுவலா்கள் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா்.
இதுகுறித்து குடவாசல் திமுக நகர செயலா் ஆா். முருகேசன் கூறியது:
இடிந்த வகுப்பறை கட்டடம் 10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டது. தற்போது பெய்த 5 நாள் மழைக்கே கட்டடம் தாங்கவில்லை. கட்டடம் கட்டியதில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை மேற்கொண்டு, தவறு செய்தவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்







