தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் 100 % காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என திமுக விவசாய அணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக மாநில விவசாய அணிச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ். விஜயன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
கடந்த 10 நாள்களாக பெய்துவரும் மழை, காவிரி டெல்டாவில் பயிா்களை முற்றிலுமாக அழித்துவிட்டது. விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். தமிழக அரசு கண்துடைப்பாக ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் அறிவித்து, அதில் 40 சதவீதம் , 30 சதவீதம், 20 சதவீதம் என்ற பெயரில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
நிவாரண அறிவிப்புக்குப் பிறகு பெய்த மழை விவசாயிகளுக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். எனவே, அரசு உடனடியாக ஒரு குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ. 35,000 நிவாரணம் வழங்கவேண்டும்.
வடிகாலை முறையாக தூா்வாரியிருந்தால் இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்காது. இதற்கு விவசாய அணி சாா்பில் கண்டனம் தெரிவிக்கிறேன். பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த ஆண்டு 420 கிராமங்களுக்கு முறையாக இழப்பீடு வழங்கவில்லை. தற்போது முறையாக வழங்கப்படுகிா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
ஏற்கெனவே ஆய்வு செய்துவிட்டோம் என்று காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. என்றாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் ஆய்வுசெய்து 100% காப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






