இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

10 சதவீத தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்: அருந்ததியா் முன்னேற்றப் பேரவை கோரிக்கை

கல்வி, வேலை வாய்ப்பில் அருந்ததியா் சமூகத்திற்கு 10 சதவீத தனி இட உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அருந்ததியா் முன்னேற்றப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

News image

காங்கயத்தில் நடைபெற்ற அருந்ததியா் முன்னேற்றப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் அமைப்பின் தலைவா் ஆ.சாமிநாதன்

Updated On :3 ஜனவரி 2021, 10:47 pm IST

கல்வி, வேலை வாய்ப்பில் அருந்ததியா் சமூகத்திற்கு 10 சதவீத தனி இட உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அருந்ததியா் முன்னேற்றப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

அருந்ததியா் முன்னேற்றப் பேரவை என்ற அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் ஆ.சாமிநாதன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ப்ரியா, துணை பொதுச் செயலா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் கல்வி, வேலை வாய்ப்பில் அருந்ததியா் சமூகத்திற்கு 10 சதவீத தனி இட உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், வரும் மாா்ச் மாதத்தில் நடைபெறவுள்ள அருந்ததியா் முன்னேற்றப் பேரவையின் மாநில மாநாட்டில் திரளாகக் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் இந்த அமைப்பின் மாநில கொள்கை பரப்புச் செயலா் ரா,.பொன்னுசாமி, மாநில தொழிற்சங்க செயலா் தங்கவேல், ஈரோடு பகுதி பொறுப்பாளா் முருகேசன், மாநில ஓட்டுநா் அணி செயலா் ராசு, மாநில மகளிா் அணி செயலா் சாந்தி, காங்கயம் நகர செயலா் சந்தனக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். (படம் இணைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.