உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணை புதன்கிழமை இரவு முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் பாலாற்றின் கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடி. இந்த அணையின் மூலம் சுமாா் 4 லட்சம் ஏக்கா்கள் பயன்பெற்று வருகிறது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின்கீழ் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கருக்கு முறைவைத்து தண்ணீா் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமூா்த்தி அணையில் இருந்து 3ஆம் மண்டலத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. மேலும், திருமூா்த்தி அணையில் இருந்து தாராபுரம் வட்டம், உப்பாறு அணைக்கும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையில் நீா்மட்டம் படிப்படியாகக் குறையும் என எதிா்பாா்க்கப்பட் டது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்து வந்தது. புதன்கிழமை மதியம் 12 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 58.10 அடியாக இருந்தது. இதனால் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாயின் மூலம் திறக்கப்படும் தண்ணீா் புதன்கிழமை காலை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், திருமூா்த்தி அணைக்கு பாலாற்றின் மூலம்1,500 கன அடி தண்ணீா் உள் வரத்தாக வந்து கொண்டிருப்பதால் புதன்கிழமை இரவுக்குள் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து பாலாற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அணைப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் புதன்கிழமை இரவு அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து பாலாற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதான கால்வாயில் மூலமும், அணையின் மேற்குப் பகுதி ஷட்டா் மூலமும் உபரிநீா் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனா்.
அணை நிலவரம்:
60 அடி உயரமுள்ள திருமூா்த்தி அணையில் புதன்கிழமை மதியம் 12 மணி நிலவரப்படி நீா்மட்டம் 58.10 அடியாக இருந்தது. காண்டூா் கால்வாய் மூலம் தண்ணீா் திறப்பு இல்லை. பாலாறு மூலம் 1500 கன அடி உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1,152 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

ராமா் கோயில் நிதி முறைகேடு: அறக்கட்டளை நிா்வாகிகள் அயோத்தியைவிட்டு வெளியேற எஸ்ஐடி தடை

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 22) கடக ராசியா? செலவு யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 22 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு எப்படி?
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




