கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் செய்யப்பட்டதை அடுத்து, விழுப்புரம் - திருப்பதி இடையிலான பயணிகள் ரயில் சேவை புதன்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
கரோனா தொற்று பொது முடக்கத்தால், விழுப்புரம்-திருப்பதி இடையிலான பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி புதன்கிழமை முதல் திருவண்ணாமலை வழியாக விழுப்புரம்-திருப்பதி இடையிலான தினசரி பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
இணையவழியில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
விழுப்புரத்திலிருந்து புதன்கிழமை அதிகாலை 5.25 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் திருவண்ணாமலை, காட்பாடி வழியாக திருப்பதியை சென்றடைந்தது.
மீண்டும் திருப்பதியில் அன்று பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்ட ரயில் இரவு 8.15 மணிக்கு விழுப்புரத்தைச் சென்றடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போளூரில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
உயர்வுக்கான பாதை உயர்கல்வி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
