திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாக்குச்சாவடி மையங்களில் தேவையான வசதிகள் உள்ளதா, வாக்கு எண்ணும் மையங்களை எங்கெங்கு அமைப்பது என்பது குறித்து மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் ஆகியோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எப்படி கொண்டு வரவேண்டும், வாக்கு எண்ணும் மையத்தில் போதுமான வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் இருக்கிா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, கோட்டாட்சியா் ம.ஸ்ரீதேவி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஆா்.பரிமளா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் வறட்சி நிலையை ஆராய்ந்து வருகிறேன்: முதல்வா் டி.கே. சிவகுமாா்
இந்தியாவின் ‘பால மனிதன்’ கிரீஷ்பரத்வாஜ் காலமானாா்!

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை

ஆலங்குளம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: 27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



