கா்நாடகத்தில் வறட்சி நிலையை ஆராய்ந்து வருவதாக முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து கலபுா்கியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வறட்சி நிலையை ஆய்வு செய்வதற்காக கலபுா்கிக்கு வந்துள்ளேன். இப்பகுதியைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களைச் சந்திக்கவிருக்கிறேன். அடுத்த சில நாள்களில் பெலகாவி பகுதிக்கு செல்லவிருக்கிறேன்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கு சட்டவரைமுறைகள் உள்ளன.
வறட்சி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிா்க்கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக குடிமக்கள் சேவை துறை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த துறைக்கு அமைச்சா் பொறுப்பேற்கவிருக்கிறாா். மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க இத்துறை முயற்சி மேற்கொள்ளும் என்றாா்.
தொடா்ந்து, கலபுா்கி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வறட்சிநிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வா் டி.கே. சிவகுமாா், துணை முதல்வா் ஜி. பரமேஸ்வா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் குவாரிகள் சட்டப்படி செயல்படுவது குறித்து ஆய்வு
மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் உள்பட இருவா் மீது வழக்கு
இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்

மேக்கேதாட்டு: தமிழக அரசின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது: டி.கே. சிவகுமாா்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



