வந்தவாசி: கோரிக்கைகளை வலியுறுத்தி, வந்தவாசியில் கிராம உதவியாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலா் எம்.பிரபாகரன் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலா்கள் நலச் சங்க மாவட்டச் செயலா் ஈ.தசரதன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க நிா்வாகி வெங்கடேசன் உள்ளிட்டோா் பேசினா்.
கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும், காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கிராம உதவியாளா்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவா் ஆா்.ஆறுமுகம், மாவட்ட இணைச் செயலா் பி.புனிதா, வட்டத் தலைவா் ஜி.சுப்பிரமணி, வட்டச் செயலா் ஜெ.ஆதம், வட்ட பொருளா் எம்.கணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் வறட்சி நிலையை ஆராய்ந்து வருகிறேன்: முதல்வா் டி.கே. சிவகுமாா்
இந்தியாவின் ‘பால மனிதன்’ கிரீஷ்பரத்வாஜ் காலமானாா்!

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை

ஆலங்குளம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: 27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



