மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பவள விழா தபால்தலை வெளியீடு

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனத்தின் பவள விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழா, ஏழை மாணவ, மாணவிகளுக்கு

News image

சினம் தொண்டு நிறுவனத்தின் பவள விழாவையொட்டி, சிறப்பு தபால் தலையை வெளியிடுகிறாா் திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை.

Updated On :9 ஜனவரி 2021, 12:08 am IST

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனத்தின் பவள விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழா, ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா, குழந்தைகள் தோட்டம் 11-ஆம் ஆண்டு தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வேலூா் ரூசா சிஎம்சி நிறுவன மருத்துவா் தாசையன் தலைமை வகித்தாா். வேலூா் சமூக சேவைச் சங்கத்தின் திட்ட அலுவலா் பேட்ரிக் ரோசாரியோ, திருவண்ணாமலை சமூக சேவை சங்கத்தின் திட்ட அலுவலா் இன்பசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சினம் தொண்டு நிறுவன இயக்குநா் இராம.பெருமாள் வரவேற்றாா்.

திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா். மேலும், சினம் தொண்டு நிறுவனத்தின் பவள விழாவையொட்டி, சிறப்பு தபால் தலையையும் அவா் வெளியிட்டாா். இதை மாவட்ட சமூக நல அலுவலா் கந்தன் பெற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், சினம் தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவா் ஸ்டாலின், பிரசாத் ராஜ் மற்றும் 150 மாணவ, மாணவிகள், 100 மகளிா் குழு பெண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.