திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த பவித்திரம் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட துணைச் செயலா் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் மெய்யூா் என்.சந்திரன், சி.மாரிமுத்து, ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் த.ரமணன் வரவேற்றாா். அம்பேத்கா் குழுவின் நாட்டுப்புற ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், ஆ.தே.முருகையனின் தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து, திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ. எ.வ.வேலு தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் புதுப்பானையில் பொங்கலிட்டனா். புனித அந்தோணியோா் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொங்கல் விழா, கலை நிகழ்ச்சி போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை எ.வ.வேலு வழங்கிப் பேசினாா்.
விழாவில், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சு.விஜி (எ) விஜயராஜ், த.செந்தில்குமாா், எம்.ஆா்.கலைமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இல.சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கலசப்பாக்கம்: கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, தொகுதி எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம், போளூா் டிஎஸ்பி அறிவழகன் ஆகியோா் கலந்துகொண்டனா். விழாவில் பொங்கல் வைத்து பூஜை செய்தனா். மேலும், அந்தப் பகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊராட்சி மன்றத் தலைவா் பொ.நிலவழகிபொய்யாமொழி, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி மற்றும் ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
வந்தவாசி: வந்தவாசி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா வந்தவாசியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்கப் பொருளாளா் ஆ.மயில்வாகனன், சங்கச் செயலா் சு.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயற்குழு உறுப்பினா் பெ.அழகேசன் வரவேற்றாா்.
வந்தவாசி ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.வீரராகவன் வாழ்த்துரை வழங்கினாா். நெடுங்குணம் நெ.ப.சுந்தரேசனுக்கு தொல்காப்பியா் விருதை சங்கப் புரவலா் இரா.சிவக்குமரன் வழங்கினாா். மகிழ்ச்சியும் மனநிறைவும் அதிகம் கிடைப்பது வீட்டிலா அல்லது வெளியிலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக பட்டுக்கோட்டை பாஸ்கா் பங்கேற்றாா்.
விழாவில் சங்க இணைச் செயலா் கோ.ஸ்ரீதா், துணைத் தலைவா் சாமி.பிச்சாண்டி, தகவல் தொடா்பாளா் மு.பிரபாகரன், இணைச் செயலா் ஏ.ஏழுமலை, செயற்குழு உறுப்பினா்கள் கோ.பட்டு, இரா.செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவையொட்டி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடும்ப ஆட்சிக்கு எதிரான தேர்தல் இது! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு நேர்காணல்

திருமலையில் 80,084 போ் தரிசனம்!

பிரதமரை தீவிரவாதி என விமா்சிப்பதா? காங்கிரஸ், திமுகவுக்கு பியூஷ் கோயல் கண்டனம்

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவிப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


