இந்தியாவின் முன்னணி டூவீலர் நிறுவனங்களுள் ஒன்றான மஹிந்திரா, விழாக்காலத்தையொட்டி, தனது கஸ்டோ ஸ்கூட்டரின் இரண்டு சிறப்பு பதிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
பசிபிக் மேட் புளூ மற்றும் கிரிம்சன் மேட் ரெட் ஆகிய இரு ப்ரத்யோக வண்ணங்களில் வெளிவந்திருக்கும் இந்த சிறப்பு பதிப்பு, இணையவழி விற்பனை நிறுவனமான பேடிஎம் தளத்தில் கிடைக்கும். விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ. 5000 முன்பணம் செலுத்தி பேடிஎம் இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
கஸ்டோவின் உச்ச வேரியண்டான VX-யை இரு புதிய வண்ணங்களில் சிறப்பு பதிப்பாக வெளியிட்டிருக்கும் மஹிந்திரா நிறுவனம், கால்பகுதியின் பேனல்களை, ஏற்கனவே இருக்கும் மாடல்களின் கருப்பு வண்ணத்திற்கு பதிலாக, பீஜ் வண்ணத்தில் அமைத்திருக்கிறது. மற்றபடி வேறெந்த இயந்திர மாற்றங்களும் செய்யப்படவில்லை.
109.6 சிசி சிங்கிள் சிலிண்டரைக்கொண்ட கஸ்டோ, அதிகபட்சமாக 8 பிஹெச்பி ஆற்றலையும், 9 என்எம் இழுவைத்திறனையும் கொண்டது. அராய் மதிப்பீட்டின்படி லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ் கொடுக்கும்.
தங்களது நிறுவன தயாரிப்புகளின் இணைய வழி விற்பனையை முன்னெடுத்து செல்லும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த சிறப்பு பதிப்புகள் இணையத்தில் ப்ரத்யோகமாக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருக்கிறது.
credits: hero bikes
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


