ஜிஎஸ்டி-க்குள் விமான எரிபொருள்: மத்திய அரசு பரிசீலனை
விமானங்களில் பயன்படுத்தப்படும் டர்பைன் எரிபொருளை (ஏடிஎஃப்) சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.


விமானங்களில் பயன்படுத்தப்படும் டர்பைன் எரிபொருளை (ஏடிஎஃப்) சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மக்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருமாறு மத்திய நிதியமைச்சகத்திடம் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கூடிய விரைவில் அந்த நடவடிக்கையை எடுக்குமாறு கோரியுள்ளோம் என்றார் அவர்.
விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் செலவினங்களில் மிக முக்கியப் பங்கு வகிக்கு விமான எரிபொருள்களுக்கு தற்போது மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்களது விருப்பப்படி தனித் தனியாக வரிகளை விதித்து வருகின்றன.
அந்த எரிபொருள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டால், விமானப் பயணக் கட்டணங்கள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...