சிட்பி (ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா) வங்கியின் நிகர லாபம் சென்ற நிதி ஆண்டில் ரூ.1,429 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆண்டு பொதுக் குழு கூட்டத்துக்குப் பிறகு இதுகுறித்து அந்த வங்கி தெரிவித்துள்ளதாவது:
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு கடன் வழங்குவதை முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்பி வங்கியின் வருவாய் சென்ற நிதி ஆண்டில் ரூ.6,600 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2016-17 நிதி ஆண்டில் ஈட்டிய வருவாய் ரூ.6,346 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகம். குறிப்பாக, வங்கியின் வருவாய் 2017 செப்டம்பரிலிருந்தே குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தது. நிகர லாபம் ரூ.1,120 கோடியிலிருந்து 27.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,429 கோடியாகியுள்ளது.
2017 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.79,682 கோடியாக இருந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 2018-இல் 37 சதவீதம் அதிகரித்து ரூ.1,08,869 கோடியை எட்டியுள்ளதாக சிட்பி வங்கி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு மத்திய அரசு விளம்பரம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


