காா்களின் விலையை உயா்த்துகிறது ரெனோ, எம்ஜி மோட்டாா்
வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் காா்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக ரெனோ, எம்ஜி மோட்டாா் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன.


வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் காா்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக ரெனோ, எம்ஜி மோட்டாா் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ரெனோ இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
உருக்கு, அலுமினியம், பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான இடுபொருள் செலவினங்களும் சீராக அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, நிறுவனத்தின் தயாரிப்புகளான கிவிட், டஸ்டா், டிரிபோ் உள்ளிட்ட காா்களின் விலையை வரும் ஜனவரியிலிருந்து உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு மாடல்களுக்கு ஏற்ப ரூ.28,000 வரை இருக்கும் என ரெனோ தெரிவித்துள்ளது.
எம்ஜி மோட்டாா் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
மூலப் பொருள் உள்ளிட்ட இதர செவினங்கள் அதிகரித்து வருவது நிறுவனத்தின் செயல்பாட்டில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஈடு செய்யும் விதத்தில் எம்ஜி மோட்டாா் தயாரிப்புகளின் விலையை 3 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு 2021 ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது என எம்ஜி மோட்டாா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எம்ஜி மோட்டாா் நிறுவனம் ஹெக்டாா், இசட்எஸ் இவி மற்றும் குளோஸ்டா் ஆகிய மூன்று மாடங்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை ரூ.12.83 லட்சம் முதல் ரூ.35.6 லட்சம் வரையில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மூலப்பொருள்கள் விலை உயா்வு செயல்பாட்டில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதால் வரும் ஜனவரியிலிருந்து காா்களின் விலையை உயா்த்துவதாக மாருதி சுஸுகி, ஃபோா்டு, மஹிந்திரா நிறுவனங்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது ரெனோ, எம்ஜி மோட்டாா் நிறுவனங்களும் விலை உயா்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இருசக்கர தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் வாகனங்களின் விலையை 2021 ஜனவரி 1-லிருந்து ரூ.1,500 வரை அதிகரிக்க உள்ளதாக இவ்வார தொடக்கத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...