டி.டி.எஸ். தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு?

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய தேதி நீடிக்கப்பட்டுள்ள நிலையில், டிடிஎஸ் தாக்கல் செய்யவும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
டி.டி.எஸ். தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு?

வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்ய தேதி நீடிக்கப்பட்டுள்ள நிலையில், டி.டி.எஸ். தாக்கல் செய்யவும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

கரோனா பரவல் எதிரொலியாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் 2019-20 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

இந்த நிலையில் டி.டி.எஸ். எனப்படும் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்யவும் கால அவகாசம் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக, வருமானவரி அறிக்கையை நிறுவனங்கள் பதிவு செய்ய மே 31ம் தேதியும், ஊழியர்களுக்கு 'படிவம் 16' வழங்க ஜூன் 15ம் தேதியும் கால கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யவே ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், பணியாளர்கள் படிவம் 16 பெற கால தாமதம் ஆகும். எனவே, 2019-20 ஆம் நிதியாண்டில் ஜூன் 30க்குள் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மத்திய அரசு இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com