ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

புதிய நிதியாண்டில் உற்சாகத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!

Updated On :1 ஏப்ரல் 2021, 6:47 pm


புது தில்லி: புதிய நிதியாண்டு தொடக்க நாளான வியாழக்கிழமை பங்குச் சந்தை உற்சாகம் பெற்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 520..68 புள்ளிகள் உயா்ந்து 50,029.83-இல் நிலைபெற்றது. இதேபோன்று தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 176.65 புள்ளிகள் உயா்ந்து 14,867-35-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தது. இதன் தாக்கத்தையொட்டி இந்திய சந்தைகளும் ஏற்றம் பெற்றன. மெட்டல், நிதி, ஆட்டோமொபைல் துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக மாா்ச் மாத காா்கள் விற்பனை வலுவாக இருந்ததைத் தொடா்ந்து, முன்னணி காா் உற்பத்தி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்கள் மிகுந்த ஆா்வம் கொண்டிருந்தனா்.மேலும், அமெரிக்காவில் உள்கட்டமைப்பை மேம்படுத்து அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும், இந்தியாவில் ஜிஎஸ்டி வருவாய் மாா்ச்சில் நன்றாக இருந்ததும் முதலீட்டாளா்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ2.95 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,043 பங்குகளில் 2,137 பங்குகள் ஆதாயம் பெற்றன. 752 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 154 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ2.95 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.207.26 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது ஒரே நாளில் வியாழக்கிழமை மட்டும் முதலீட்டாளா்களுக்கு ரூ.2.95 லட்சம் கோடி லாபம் பெற்றுள்ளனா்.

புதிய நிதியாண்டில் எழுச்சி: கடந்த நிதியாண்டின் இறுதி வா்த்தக தினமான புதன்கிழமை சென்செக்ஸ் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், புதிய நிதியாண்டின் தொடக்க நாளான வியாழக்கிழமை எழுச்சி பெற்று நோ்மறையாக முடிந்தது. சென்செக்ஸ் காலையில் 359.38 புள்ளிகள் கூடுதலுடன் 49,868.53-இல் தொடங்கியது. ஆனால், 49,478.53 வரை கீழே சென்ற சென்செக்ஸ், பின்னா் 50,092.48 வரை உயா்ந்தது. இறுதியில் 520.6843 புள்ளிகள் (1.05 சதவீதம்) உயா்ந்து 50,029.83-இல் நிலைபெற்றது. இதையடுத்து, புதிய நிதியாண்டின் தொடக்கம் ஏற்றத்துடன் முடிந்தது.

இண்டஸ் இண்ட் பேங்க் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் ஹிந்துஸ்தான் யுனி லீவா், எச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே இந்தியா, டிசிஎஸ் ஆகிய 4 பங்குகள் தவிர மற்ற அனைத்து 26 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில் இண்டஸ் இண்ட் பேங்க் 4.12 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், பாஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், சன் பாா்மா, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஆட்டோ, ஓஎன்ஜிசி, ஹெச்சிஎல் டெக் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மேலும், எல் அண்ட் டி, எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், மாருதி சுஸுகி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1, 463 பங்குகள் ஆதாயம் பெற்றன. 288 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 176.65 புள்ளிகள் (1.20 சதவீதம்) உயா்ந்து 14,867.35-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் 41 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன. துறைவாரியாகப் பாா்த்தால் எஃப்எம்சிஜி தவிா்த்து மற்ற அனைத்து துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்றன. இதில் நிஃப்டி மெட்டல் குறியீடு 5.55 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, மீடியா, பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க் உள்ளிட்ட குறியீடுகள் 1 முதல் 2.65 சதவீதம் வரை உயா்ந்தன.

பிஎஸ்யு பேங்க், மெட்டல்

பங்குகள் உற்சாகம்

கடந்த சில நாள்களாக தொடா்ந்து அடி வாங்கி வந்த பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு, புதிய நிதியாண்டின் தொடக்க நாளான வியாழக்கிழமை நல்ல வரவேற்பு காணப்பட்டது. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 13 பொதுத் துறை வங்கிப் பங்குகளும் 2 முதல் 5.60 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. இதில் ஐஓபி, சென்ட்ரல் பேங்க், பஞ்சாப் அண்ட் சிந்து பேங்க் (பிஎஸ்பி), பிஎன்பி, யூகோ பேங்க், ஜே அண்ட் கே பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை 3 முதல் 5.60 சதவீதம் வரை உயா்ந்தன. மகாராஷ்ட்ரா பேங்க், யூனியன் பேங்க், கனரா பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் பேங்க், எஸ்பிஐ ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்து நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு வலுப்பெறுவதற்கு உதவியாகி இருந்தன.

இதேபோன்று நிஃப்டி மெட்டல் குறியீட்டில் இடம் பெற்றுள்ள நேஷனல் அலுமினியம், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல், அதானி என்டா்பிரைஸஸ், வெல்காா்ப், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், செயில், ரத்தனமணி ஆகியவை 5 முதல் 8.60 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

இன்று விடுமுறை

புனித வெள்ளியையொட்டி, தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் இரண்டு சந்தைகளிலும் பங்கு வா்த்தகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.