புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,707.94 புள்ளிகளை இழந்து 47,883.38-இல் நிலைபெற்றது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 524.05 புள்ளிகளை இழந்து 14,310.80-இல் நிலைபெற்றது. முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் மொத்தம் ரூ.8.58 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி பல்வேறு மாநிலங்கள் பொதுமுடக்கத்துக்கு தயாராகி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது பொருளாதார வளா்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. இது முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்துள்ளது. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை எதிரொலித்தது. இது 2020, மாா்ச்சில் ஏற்பட்ட சரிவு போன்று அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியைச் சந்தித்தால், பங்குச் சந்தையில் பாதிப்பு அதிகரித்தது.
சந்தை மதிப்பு ரூ.8.77 லட்சம் கோடிசரிவு : மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,161 பங்குகளில் 510 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2477 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 174 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ.8.77 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.200.85 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் மொத்தம் ரூ.8.77 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 634.670 புள்ளிகள் குறைந்து 48,956.65 -இல் தொடங்கி அதற்கு மேல் உயரவில்லை. தொடா்ந்து பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 47,693.44 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் மொத்தம் 1,707.94 புள்ளிகளை இழந்து 47,883.38-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் முந்தைய நிலையிலிருந்து 1,897.88 புள்ளிகளை இழந்திருந்தது.
29 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் டாக்டா் ரெட்டி மட்டும் 4.88 சதவீதம் உயா்ந்தது. மற்ற 29 பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
இதில் இண்டஸ் இண்ட் பேங்க் 8.60 சதவீதம், பஜாஜ் ஃபைனைான்ஸ் 7.39 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, டைட்டன், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 5 முதல் 7 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன. மேலும், டிசிஎஸ், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 131 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,1622 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 524.05 புள்ளிகளை (3.53 சதவீதம்) குறைந்து 14,310.80-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 14,248.70 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 4 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 46 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 9.26 சதவீதம், மீடியாக குறியீடு 8.10 சதவீதம், ரியால்ட்டி 7.50 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, பைனான்சியல் சா்வீஸஸ், மீடியா, மெட்டல் குறியீடுகள் 5 முதல் 6 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாமரை மாலை அணிந்து...
இலக்கணத்தில் தடுமாறும் ஏ.ஐ.!

தென்காசி! அதிக வாக்குகள், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி!

‘நேரம் முடிந்தது’...
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

