சமூக ஊடகமான பேஸ்புக்கில் உங்களது புகைப்படங்கள் அல்லது ஆவணங்களை பகிர புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பயனர்கள் பேஸ்புக்கில் தாங்கள் பதிவிடும் புகைப்படங்கள் அல்லது பதிவுகளை கூகுள் டாகுமெண்ட்ஸ், பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ்.காம் ஆகியவற்றிற்கு நேரடியாக மாற்றலாம்.
பயனர்களின் வசதிக்காக அவர்கள் தாங்கள் பதிவிடும் முக்கியப் பதிவுகளை தரவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ள இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை மனதில் கொண்டு இந்த வசதியை நாங்கள் வடிவமைத்துள்ளோம். அவ்வாறு உங்கள் பதிவுகளை பகிரும்போது பாதுகாப்பு கருதி ஒருமுறை உங்களுடைய கடவுச் சொல்லை உள்ளிட்ட வேண்டும் என்று விளக்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக நீங்கள் பேஸ்புக் பக்கத்தில் Settings & Privacy -> Settings->Your Facebook Information->Transfer Your Information என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதன்பின்னர் தனி விண்டோவில் கேட்கும் உங்களுடைய கடவுச் சொல்லை உள்ளிட்டால் உங்களுடைய பக்கத்தில் எதையெல்லாம் பகிர வேண்டும் என்று கேட்கும், அதில் புகைப்படங்கள், விடியோக்கள், பதிவுகள், குறிப்புக்கள் என்று ஆப்ஷன் இருக்கும். அதுபோன்று புகைப்படங்களில், விடியோக்களில் தேதி வாரியாக தேர்வு செய்து பகிரும் வசதி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்

மரண நாடகம்! உ.பி.யில் ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற முன்னாள் காவலர்!

மக்களவையில் 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


