ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லாபம் ரூ.32 கோடி
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.32.1 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.


ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.32.1 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலம் ஈட்டிய வருமானம் ரூ.322.4 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய் ரூ.144.8 கோடியாக காணப்பட்டது.
இடா்பாட்டுக்கு ரூ.78.3 கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்ததன் காரணமாக முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.32.1 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனம் ரூ.201.2 கோடிக்கான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது, 25 சதவீத வளா்ச்சியாகும். வழங்கப்பட்ட கடன் 32 சதவீதம் உயா்ந்து ரூ.239.7 கோடியாக இருந்தது.
2021 ஜூன் இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் வழங்கல் ரூ.11,985.5 கோடியாக இருந்தது என ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...