4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லாபம் ரூ.130 கோடி

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (டிஐஐ) நிறுவனம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தனிப்பட்ட வரிக்கு முந்தைய லாபமாக ரூ.130 கோடியை ஈட்டியுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 9:36 pm

DIN

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (டிஐஐ) நிறுவனம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தனிப்பட்ட வரிக்கு முந்தைய லாபமாக ரூ.130 கோடியை ஈட்டியுள்ளது. அதேசமயம், இந்நிறுவனம் முந்தைய 2020-21 நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.69 கோடி இழப்பை சந்தித்திருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் தனிப்பட்ட வருவாய் ரூ.379 கோடியிலிருந்து ரூ.1,257 கோடியாக அதிகரித்துள்ளது.

அனைத்து பிரிவுகளின் செயல்பாடுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வருமானம் முதல் காலாண்டில் ரூ.457 கோடியிலிருந்து ரூ.2,437 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒட்டுமொத்த வரிக்கு முந்தைய லாபம் ரூ.185 கோடியாக இருந்தது. அதேநேரம், முந்தைய நிதியாண்டில் ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டது என டிஐஐ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.