எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

56,000 புள்ளிகளை நெருங்கியது சென்செக்ஸ்

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை மேலும் 210 புள்ளிகள் உயர்ந்து 56,000 புள்ளிகளை நெருங்கியது. சென்செக்ஸ் பட்டியலில் இடம்

News image
Updated On :17 ஆகஸ்ட் 2021, 10:54 pm

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை மேலும் 210 புள்ளிகள் உயர்ந்து 56,000 புள்ளிகளை நெருங்கியது. சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள முன்னணி நிறுவனப் பங்குகளான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவர் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை வெகுவாக உயர்ந்து சென்செக்ஸ் ஏற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தன.
 பலவீனமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில், உள்நாட்டு பங்குச் சந்தையில் வர்த்தகம் நிலையற்றதாக இருந்தது. மிட்கேப் மற்றும்
 ஸ்மால் கேப் பங்குகள்அதிகளவில் விற்பனையை எதிர்கொண்டன. அதே நேரத்தில் குறியீடுகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஐடி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.240.85 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,288 பங்குகளில் 1,136 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,036 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 116 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 215 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 35 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 255 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறைநிலையை அடைந்தன. 382 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையை அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.240.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
 சென்செக்ஸ் காலையில் 16.94 புள்ளிகள் குறைந்து 55,565.64-இல் தொடங்கி, 55,386.49 வரை கீழே சென்றது. பின்னர், 55,854.88 வரை உயர்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, சென்செக்ஸ் 210 புள்ளிகள் அதிகரித்து 56,000 புள்ளிகளை நெருங்கியுள்ளது.
 டெக் மஹிந்திரா
 முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா பங்கு 3.46 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், நெஸ்லே, இன்ஃபோஸிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 1.50 சதவீதம் முதல் 2.50 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டீஸ், மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க் ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

Story image


 இன்டஸ்இண்ட் பேங்க் சரிவு:
 அதே சமயம், முன்னணி தனியார் வங்கியான இன்டஸ்இண்ட் பேங்க் 1.78 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக என்டிபிசி, பார்தி ஏர்டெல்,
 எல் அண்ட் டி, எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவை
 1 முதல் 1.15 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 52 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 580 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,207 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 51.55 புள்ளிகள் உயர்ந்து 16,614.60-இல் நிலைபெற்றுள்ளது. 16,495.40 வரை கீழே சென்ற நிஃப்டி பின்னர் 16,628.55 வரை உயர்ந்து 52 வார புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.