அனைத்து வங்கிகளும் ஏடிஎம் சேவைக் கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் , அடுத்தாண்டு ஜனவரி முதல் ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர இருக்கிறது.
தற்போது வரை வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அதே வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாகவும் அதற்கு அதிகமாக பயன்படுத்தினால் சேவைக் கட்டணமாக ரூ.20-யை தொடர்புடைய வங்கிகள் எடுத்துக் கொள்ளும்.
வேறு வங்கியின் ஏடிஎம்களில் மாநகராட்சிப் பகுதியில் 3 முறையும் மாநகராட்சி அல்லாத பகுதிகளில் 5 முறையும் இலவசமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.அதை மீறினால் ரூ.23.6 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இனி அடுத்தாண்டில் இருந்து இந்த கட்டணங்கள் உயர இருக்கிறது. அதன் படி, ஜிஎஸ்டியுடன் சேர்த்து வங்கிக் கணக்கு உள்ள வங்கி ஏடிஎம்-களில் இலவச பரிவர்த்தனையை மீறினால் ரூ.21 ஆகவும் , வேறு வங்கி ஏடிஎம்களில் 25 ரூபாய் சேவைக் கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
முன்னதாக, ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் ஜனவரி 1ல் இருந்து மற்ற வங்கிகளும் உயர்த்த இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.