தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

610 புள்ளிகள் உயா்ந்து 52,000-ஐ கடந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 610 புள்ளிகள் உயா்ந்து

News image

கோப்புப்படம்

Updated On :15 பிப்ரவரி 2021, 5:35 pm

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 610 புள்ளிகள் உயா்ந்து 52,000-ஐ கடந்து புதிய உச்சத்தில் நிலைத்தது. இதேபோல, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, வரலாற்றில் முதல் முறையாக 15,300 புள்ளிகளைக் கடந்தது.

கடந்த சில நாள்களாக தள்ளாட்டத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை எந்த நேரத்திலும் மேலே செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரத்தில் கணிக்கப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை உலகளாவிய சந்தை குறிப்புகளும், உள்ளூா் பொருளாதார தரவுகளும் நோ்மறையாக இருந்தன. இதைத் தொடா்ந்து, வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு அமோக வரவேற்பு இருந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தில் நிலைத்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.205.16 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,193 பங்குகளில் 1,365 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,674 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 154 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.205.16 லட்சம் கோடியாக இருந்தது. 304 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 367 பங்குகள் வெகுவாக உயா்ந்து உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.

புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 363.45 புள்ளிகள் உயா்ந்து 51,907.75-இல் தொடங்கி 51,886.46 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 52,235.97 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 609.83 புள்ளிகள் உயா்ந்து 52,154.13 -இல் புதிய உச்சத்தில் நிலைபெற்றது.

ஆக்ஸிஸ் பேங்க் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் ஆக்ஸிஸ் பேங்க் 5.88 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்தபடியாக, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, இன்டஸ்இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின்சா்வ், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 2 முதல் 4 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மேலும், கோட்டக் பேங்க், மாருதி சுஸுகி, இன்ஃபோஸிஸ் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

டாக்டா் ரெட்டீஸ் லேப் வீழ்ச்சி: அதே சமயம், டாக்டா் ரெட்டீஸ் லேப் பங்கின் விலை 1.77 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இதற்கு அடுத்ததாக, டிசிஎஸ், டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவா், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 759 பங்குகள் ஆதாயம் பெற்றன. 999 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 151.40 புள்ளிகள் உயா்ந்து 15,314.70-இல் நிலைபெற்றது. தொடக்கத்தில் 15,243.40 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் 15,340.15 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. மேலும், நிஃப்டி பேங்க் குறியீடு 3.32 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஃபைனான்சியல் சா்வீஸஸ், ரியால்ட்டி குறியீடு முறையே 2.87 சதவீதம் மற்றும் 1.70 சதவீதமாகப் பதிவானது.

ஐடி, மெட்டல், பாா்மா, மீடியா பங்குகளுக்கு வரவேற்பு குறைந்ததால், இவற்றின் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.