வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழ் எழுத்துகளுடன் ஸ்கூட்டி பெப் பிளஸ் புதிய வடிவம் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்கூட்டி பெப் பிளஸ் வாகனத்தில் தமிழ் எழுத்துகள் இடம் பெறும் வடிவமைப்புடன் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 2:25 am

DIN

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்கூட்டி பெப் பிளஸ் வாகனத்தில் தமிழ் எழுத்துகள் இடம் பெறும் வடிவமைப்புடன் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் செயல் திறனுடன் கூடுதல் மைலேஜையும் இந்த மாடல் அளிக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இளைஞா்களின் முதல் விருப்பமான வாகனம் என்னும் வகையில், ஸ்கூட்டி பெப் பிளஸ் ‘முதல் காதல்’ பதிப்பை அறிமுகம் செய்துள்ளோம். முதல் முறையாக தமிழ் எழுத்துகளில் வாகனத்தின் மாடல் பெயரை வடிவமைத்து உருவாக்கியுள்ளோம். இவ்வாறு தமிழில் மாடலின் சின்னத்தை வடிவமைத்திருப்பது இரு சக்கர வாகனத் தொழில்துறையில் இதுவே முதல் முறையாகும். மேலும் இந்த மாடல், புதிய அழகிய வண்ணக்கலவைகளுடன் வருகிறது.

இதன் இ.டி.எஃப்ஐ இகோ திரஸ்ட் என்ஜின் வேகம் அளிப்பதுடன், நீண்ட கால உழைப்பு, தங்கு தடையில்லாத செயல்பாடு மற்றும் சொகுசான சவாரியை உறுதி செய்கிறது. இந்தப் புதிய மாடல் கூடுதல் செயல் திறன் அளிப்பதுடன் 15 சதவீதம் கூடுதல் மைலேஜ் அளிக்கிறது.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் ‘முதல் காதல்’ பதிப்பின் விற்பனையக விலை ரூ.56,085 ஆகும். இந்த வடிவமைப்பில் தயாரித்த ஸ்கூட்டி பெப்+ குறுகிய காலத்துக்கு மட்டுமே விற்பனையில் இருக்கும்.

ஏற்கெனவே சந்தையில் உள்ள ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடல் ரூ.54,475 விலையில் விற்பனையாகிறது என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.