எச்டிஎஃப்சி வங்கி லாபம் ரூ.7,922 கோடி

எச்டிஎஃப்சி வங்கி லாபம் ரூ.7,922 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி முதல் காலாண்டில் ரூ.7,922 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி முதல் காலாண்டில் ரூ.7,922 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை அளித்த ஆவணங்களில் கூறியுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கி ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.7,922.09 கோடியை ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய லாபமான ரூ.6,927.24 கோடியுடன் ஒப்பிடுகையில் 14.36 சதவீதம் அதிகமாகும்.

இருப்பினும், வங்கி முந்தைய மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபமான ரூ.8,433.78 கோடியுடன் ஒப்பிடுகையில் ஜூன் காலாண்டில் ஈட்டிய லாபம் சரிவைச் சந்தித்துள்ளது.

2021 ஜூன் காலாண்டில் வங்கி தனிப்பட்ட முறையில் ஈட்டிய நிகர லாபம் ரூ.7,729.64 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.6,658.62 கோடியாகவும், முந்தைய மாா்ச் காலாண்டில் ரூ.8,186.51 கோடியாகவும் இருந்தன.

2021 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் வங்கியின் வருவாய் ரூ.36,771 கோடியாக இருந்தது. இது, 2020 இதே காலகட்டத்தில் ரூ.34,453 கோடியாக காணப்பட்டது.

2021 ஜூன் 30 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதமானது 1.47 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது, 2020 ஜூன் 30-இல் 1.36 சதவீதமாகவும், மாா்ச் இறுதியில் 1.32 சதவீதமாகவும் இருந்தது என எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com