நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஊழியர்கள் இனி அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய அழைப்பு: ஹெச்.சி.எல்.

ஊழியர்கள் இனி அலுவலகத்திற்கு வந்து பணிபுரியுமாறு தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

News image

ஊழியர்கள் இனி அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும்: ஹெச்.சி.எல்.

Updated On :20 ஜூலை 2021, 1:25 pm

ஊழியர்கள் இனி அலுவலகத்திற்கு வந்து பணிபுரியுமாறு 
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

கரோனா பரவலால் கடந்த ஓராண்டு காலமாக வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது தளர்வுகளால் இந்த அறிவிப்பை ஹெச்.சி.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்பத் துறையை சேர்ந்த ஹெச்.சி.எல். நிறுவனம், நடப்பு நிதியாண்டின் காலாண்டில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதில், வேலை வாய்ப்பு, காலி பணியிடங்களை நிரப்புதல், போன்றவை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மேலும், கரோனா முடக்கத்தால் வீடுகளிலிலிருந்து பணிபுரிந்த ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

கரோனா முடக்கத்தில் 3 சதவிகித ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்ததாகவும் ஹெச்.சி.எல். தெரிவித்துள்ளது.

இதுவரை 74 சதவிகித ஊழியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், நடப்பு காலாண்டில் 100 சதவிகித ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.