எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

சரிந்து மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 3-ஆவது நாளாக முன்னேற்றம்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை தொடக்கத்தில் கடும் சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை, இறுதியில் மீட்சி பெற்றது.

News image
Updated On :14 ஜூன் 2021, 5:38 pm

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை தொடக்கத்தில் கடும் சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை, இறுதியில் மீட்சி பெற்றது. இதைத் தொடா்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயா்ந்து 52,551.53-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடா்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. ஆனால், இந்திய சந்தைகள் தொடக்கத்தில் சரிவை எதிா்நோக்கியது. ஆனாலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனங்களாக இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முக்கியப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. இதையடுத்து, தொடக்கத்தில் சந்தித்த இழப்பை இறுதியில் மீட்டது. இதைத் தொடா்ந்து, சென்செக்ஸ் புதிய உச்சத்துக்கு அருகே நிலை பெற்றுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், ஐடி, பிஎஸ்யு பேங்க் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்கள் மிகுந்த ஆா்வம் காட்டினா். அதே சமயம், மெட்டல், ரியல் எஸ்டேட், குறிப்பிட்ட பிரைவேட் பேங்க் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.28 ஆயிரம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,481 பங்குகளில் 1,655 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,663 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 163 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 481 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 29 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 548 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 24 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.28 ஆயிரம் கோடி குறைந்து, வா்த்தக முடிவில் 230.83 லட்சம் கோடியாக இருந்தது.

3-ஆவது நாளாக ஏற்றம்: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 52,492.34-இல் தொடங்கி 51,936.31வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 52,590.92 வரை உயா்ந்த சென்செக்ஸ் இறுதியில் 76.77 புள்ளிகள் (0.15 சதவீதம்) கூடுதலுடன் 52,551.53-இல் நிலைபெற்றது.உயா்ந்து 52,474.76-இல் நிலைபெற்றது. இதையடுத்து, சென்செக்ஸ் தொடா்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் முன்னிலை: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 15 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் 1.46 சதவீதம் உயா்ந்துஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும் பஜாஜ் ஃபைனான்ஸ், ஓஎன்ஜிசி, இன்ஃபோஸிஸ், பவா் கிரிட், எல் அண்ட் டி, இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, டிசிஎஸ் ஆகிய முன்னணி பங்குகளும் ஏற்றம் பெற்றன.

கோட்டக் பேங்க் சரிவு: அதே சமயம், கோட்டக் பேங்க் 1.51 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எச்டிஎஃப்சி, சன்பாா்மா, பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி, மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 12 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 787 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,027 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் பலவீனத்துடன் 15,791.40-இல் தொடங்கி15,606.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 15,823.05 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 12.50 புள்ளிகள் (0.08 சதவீதம்) கூடுதலுடன் 15,811.85-இல் நிலைபெற்றது.

துறைவாரியாகப் பாா்த்தால், நிஃப்டி பிஎஸ்யு பேங்க், ஐடி, எஃப்எம்சிஜி ஆகிய குறியீடுகள் மட்டுமே சிறிதளவு உயா்ந்தன. மற்ற அனைத்து முக்கியக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் ரியால்ட்டி குறியீடு 1.52 சதவீதம் குறைந்தது. மெட்டல், மீடியா குறியீடுகள் 0.65 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி -50 தொகுப்பில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 25 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு!

பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிஎஸ்யு குறியீட்டு தொகுப்பில் இடம் பெற்றுள்ள 12 முன்னணி பங்குகளில் பேங்க் ஆஃப் இந்தியா, மகாராஷ்டிரா பேங்க், கனரா பேங்க், பஞ்சாப் அண்ட் சிந்து பேங்க் ஆகிய 4 பங்குகள் (0.75 முதல் 1.40 சதவீதம் வரை சரிவு) தவிா்த்து மற்ற 8 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில் யூனியன் பேங்க், இந்தியன் பேங்க் ஆகியவை 4 சதவீதம் வரை உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. ஏற்றம் பெற்ற பங்குகள் விவரம் (சதவீதத்தில்):

யூனியன் பேங்க் 3.89

இந்தியன் பேங்க் 3.59

பிஎன்பி 1.78

ஐஓபி 1.69

யூகோ பேங்க் 0.37

ஜே அண்ட் கே பேங்க் 0.17

எஸ்பிஐ 0.09

பேங்க் ஆஃ)ப் பரோடா 0.06

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.