ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கிளப் ஹவுஸைப் போல ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் 'லைவ் ஆடியோ சாட்'

கிளப் ஹவுஸ் மற்றும் ஸ்பாட்டிஃபை போன்ற பயன்பாடுகளுக்குப் போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனமும் ஒரு 'லைவ் ஆடியோ சாட்'-யை அறிமுகப்படுத்தியுள்ளது.  

News image
Updated On :21 ஜூன் 2021, 12:43 pm

கிளப் ஹவுஸ் மற்றும் ஸ்பாட்டிஃபை போன்ற பயன்பாடுகளுக்குப் போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனமும் ஒரு 'லைவ் ஆடியோ சாட்'-யை அறிமுகப்படுத்தியுள்ளது.  

அதன்படி, கிளப் ஹவுஸ் போன்று ஆடியோ லைவ் ஒன்று பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளது. அமெரிக்காவின் குறிப்பிட்ட பயனர்களுக்கு இது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பேஸ்புக்கில் ஏற்கெனவே இருக்கும் 'சவுண்ட் பைட்ஸ்' வசதியை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 

இதன்படி, பொது நபர்கள் யார் வேண்டுமானாலும் தங்களுடைய நண்பர்கள், தங்களை பின்தொடர்பவர்கள், சரிபார்க்கப்பட்ட பொது நபர்கள் அல்லது அரட்டையில் பங்கெடுக்க விரும்புவரை அழைக்கலாம். மேலும் இதில் பேச விருப்பமுள்ளவர்களை முன்கூட்டியோ அல்லது லைவ்வில் இருக்கும்போதோ அழைக்கலாம். இதில் பங்குகொள்பவர்களின் எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. எனவே எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்குபெறலாம். 

பொதுவான குழுக்களில் அதில் பங்குபெற்றவர் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் அந்த ஆடியோவை கேட்க முடியும். 

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களைக் கொண்டவர்களுக்கு இதுகுறித்த முன்னறிவிப்பும் வரும். இதன் மூலமாக நேரடியாக லைவ் சாட்டில் கலந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேஸ்புக்கின் இந்த லைவ் ஆடியோ சாட் விரைவில் பயனர்களுக்கு அறிமுகமாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.