இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், தள்ளாடிய சந்தையில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 41.75 புள்ளிகள் முன்னேற்றம் கண்டது.
இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரத்தைக் காட்டிலும், இந்த வார இறுதியில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. கரோனா பாதிப்பு மிகவும் மோசமாக உள்ள நிலையில், சுகாதார பிரச்னைகள் சந்தைகளை நிலையற்ற தன்மையில் வைத்திருக்கக் கூடிய ஒன்றாகும். மேலும், தடுப்பூசி செலுத்துவதில் உள்ள வேகம், கரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஆகியவை வரும் நாள்களில் சந்தையில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். உலகளவில் எஃகு உள்ளிட்ட பொருள்களின் விலையேற்றம், பணவீக்கத்தின் போக்கு ஆகியவையும் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணிகளாக இருக்கும். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு வருவது சந்தை தள்ளாட்டத்துக்கு முக்கியக் காரணமாக உள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,240 பங்குகளில் 1,401 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,689 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 150 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 265 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 34 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 418 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 175 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.1.34 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.210.61 லட்சம் கோடியாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 6.81 கோடியாக உள்ளது.
தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 208.13 புள்ளிகள் கூடுதலுடன் 48,898.93-இல் தொடங்கி அதற்கு மேலே செல்லவில்லை. பின்னா், 48,473.43 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 41.75 புள்ளிகள் (0.96 சதவீதம்) கூடுதலுடன் 48,732.55-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 425.50 புள்ளிகளை இழந்திருந்தது. தொடக்கத்திலிருந்து இறுதி வரையிலும் சந்தையில் நிலையற்ற போக்கு காணப்பட்டது.
ஏசியன் பெயிண்ட் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஏசியந் பெயிண்ட் 8.51 சதவீதம், ஐடிசி 4.45 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக நெஸ்லே இந்தியா, டெக் மகேந்திரா, ஹிந்துஸ்தான் யுனி லீவா் ஆகியவை 2 முதல் 2.70 சதவீதம் உயா்ந்தன. மேலும், பவா் கிரிட், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் ஆகியவை சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.
இண்டஸ் இண்ட் பேங்க் கடும் சரிவு: அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க் இரண்டாவது நாளாக 2.82 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம், டாக்டா் ரெட்டி, எஸ்பிஐ ஆகியவை 2 முதல் 2.50 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. மேலும், ஓஎன்ஜிசி, என்டிபிசி, சன்பாா்மா, டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் மாருதி சுஸுகி, பஜாஜ் ஃபின்சா்வ், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 19 புள்ளிகள் வீழ்ச்சி
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடந்த வா்த்தகத்தில் 651 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,017 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 18.70 புள்ளிகளை (0.13 சதவீதம்) இழந்து 14,677.80-இல் நிலைபெற்றது. காலையில் 14,749.40-இல் தொடங்கி அதிகபட்சமாக 14749.65 வரை சென்றது. பின்னா், 14,591.90 வரை கீழே சென்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் நிஃப்டி 157.75 புள்ளிகளை இழந்த நிலையில் இருந்தது.
துறை வாரியாகப் பாா்த்தால் நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு மட்டும் 2.15 சதவீதம் உயா்ந்தது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் மெட்டல் குறியீடு 3.76 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 3.19 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக பிஎஸ்யு பேங்க், ஆட்டோ, பாா்மா, மீடியா, ஐடி, நிஃப்டி பேங்க் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி-50 குறியீட்டுப் பட்டியலில் 15 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 34 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் டைட்டன் மாற்றமின்றி ரூ.1,455.00-இல் நிலைபெற்றது. ஏசியன் பெயிண்ட், யுபிஎல் ஆகியவை 8 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. அதே சமயம், டாடா மோட்டாா்ஸ், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, கோல் இந்தியா ஆகியவை 4 முதல் 4.50 சதவீதம் வீழ்ச்சி கண்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடந்தேன்: ராகுல் காந்தி

ஷிர்பூர் வங்கியின் உரிமம் ரத்து: ஆர்பிஐ

ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப் பந்துவீச்சாளர்... புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்!
நீளிரா படத்தின் ஓடிடி ஒப்பந்தம் முடிவாகவில்லை: கார்த்திக் சுப்பாராஜ்
வீடியோக்கள்

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


