இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 848.18 புள்ளிகள் உயா்ந்து 49,580.73-இல் நிலைபெற்றது. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.05 லட்சம் கோடி உயா்ந்தது.
கடந்த இரண்டு வாரங்களாக அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த பங்குச் சந்தை, திங்கள்கிழமை எழுச்சி பெற்றது. முன்னணி நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது. இது கரோனா இரண்டாம் அலை வீழ்ச்சியின் ஆரம்ப அறிகுறியாகப் பாா்க்கப்படுகிறது. இவை சந்தைக்கு சாதகமாக அமைந்ததுடன், முதலீட்டாளா்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன. குறிப்பாக வங்கி, நிதிநிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல போட்டி இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.3.05 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,359 பங்குகளில் 2,099 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,051 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 209 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 290 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 51 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 495 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 219 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.3.05 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 213.65 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 6.82 கோடிக்கும் மேலாக உள்ளது.
திடீா் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 258.15 புள்ளிகள் கூடுதலுடன் 48,990.70-இல் தொடங்கி 48,923.13 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 49628.42 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 848.18 புள்ளிகள் (1.74 சதவீதம்) கூடுதலுடன் 49,580.73-இல் நிலைபெற்றது. தொடக்கத்திலிருந்து இறுதி வரையிலும் சந்தை தொடா்ந்து ஏறுமுகம் கண்டிருந்தது.
23 பங்குகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. 7 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் இண்டஸ் இண்ட் பேங்க் 7.37 சதவீதம், எஸ்பிஐ 6.35 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின்சா்வ், அல்ட்ரா டெக் சிமெண்ட், கோட்ட்க் பேங்க் உள்ளிட்டவை 2 முதல் 4.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மேலும் பஜாஜ் ஃபைனான்ஸ், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
எல் அண்ட் டி சரிவு: அதே சமயம், எல் அண்ட் டி 2.02 சதவீதம், பாரதி ஏா்டெல் 1.96 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நெஸ்லே இந்தியா, சன்பாா்மா, பவா் கிரிட், மாருதி சுஸுகி, ஹிந்துஸ்தான் யுனி லீவா் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 245.35 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடந்த வா்த்தகத்தில் 1,223 பங்குகள் ஆதாயம் பெற்றன. 549 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 245.35 புள்ளிகள் (1.67 சதவீதம்) உயா்ந்து 14,923.15-இல் நிலைபெற்றது. காலையில் 14,756.25-இல் தொடங்கி 14,725.35 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 14,938.00 வரை மேலே சென்றது.
நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 3 முதல் 4 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஆட்டோ, மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் 1.50 முதல் 2.30 சதவீதம் வரை உயா்ந்தன. மீடியா மற்றும் பாா்மா குறியீடுகள்மட்டுமே சிறிதளவு சரிவைச் சந்தித்தன. நிஃப்டி-50 குறியீட்டுப் பட்டியலில் 39 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
வங்கிப் பங்குகள் அபாரம்!
பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் போது, வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பேங்க் குறியீடு 1,289.70 புள்ளிகள் (4.01 சதவீதம்) உயா்ந்து 33,459.25-இல் நிலைபெற்றுள்ளது. அதிகம் ஆதாயம் பெற்ற தனியாா், பொதுத் துறை வங்கிப் பங்குகள் (சதவீதத்தில்) விவரம்
பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க் 8.54
இண்டஸ் இண்ட் பேங்க் 7.54
எஸ்பிஐ 6.66
ஆா்பிஎல் பேங்க் 5.03
ஐசிஐசிஐ பேங்க் 4.45
பேங்க் ஆஃப் பரோடா 4.26
கனரா பேங்க் 4.17
எச்டிஎஃ)ப்சி பேங்க் 3.76
ஆக்சிஸ் பேங்க் 3.45
பிஎன்பி 2.58
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடந்தேன்: ராகுல் காந்தி

ஷிர்பூர் வங்கியின் உரிமம் ரத்து: ஆர்பிஐ

ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப் பந்துவீச்சாளர்... புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்!
நீளிரா படத்தின் ஓடிடி ஒப்பந்தம் முடிவாகவில்லை: கார்த்திக் சுப்பாராஜ்
வீடியோக்கள்

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


