

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஒன் பிளஸ் 9ஆர்டி’ ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகமாகியிருக்கிறது.
தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் சீனாவைச் சேர்ந்த ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பாக ’9ஆர்டி’ ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்த இருக்கிறது.
'ஒன் பிளஸ் 9ஆர்டி’சீனாவில் அறிமுகப்படுத்தப்பட பின் இந்தியாவிலும் சந்தைப்படுத்த இருக்கிறார்கள். ஆனால் அறிமுகத் தேதி குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க | வஉசி துறைமுகம்: 1000 ஏக்கரில் பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா
’ஒன் பிளஸ் 9ஆர்டி’ சிறப்பம்சங்கள் :
*6.5 ஃபுல் எச்டி திரை
*குவால்காம் ஸ்னாப்டிராகன் 888
* உள்ளக நினைவகம் 8ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி ,
*ஆன்டுராய்ட் 11
*50 எம்பி முதன்மை கேமரா , 16 எம்பி செல்ஃபி கேமரா
* மெமரி கார்டு வசதி
*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி
இந்திய விற்பனை விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் ரூ.24,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.