வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் ஃபைனான்ஸ்: லாபம் ரூ.607 கோடி

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.606.54 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 7:02 pm

DIN

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.606.54 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக தனிப்பட்ட முறையில் ரூ.2,470.69 கோடி வருவாய் ஈட்டியது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,439.78 கோடியுடன் ஒப்பிடும்போது சற்று அதிகம்.

இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் தனிப்பட்ட லாபம் ரூ.431.91 கோடியிலிருந்து ரூ.606.54 கோடியாக அதிகரித்தது.

செப்டம்பருடன் நிறைவடைந்த ஆறு மாத காலத்தில் நிறுவனத்தின் தனிப்பட்ட மொத்த வருமானம் ரூ.4,553.43 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.4,937.70 கோடியாகவும், தனிப்பட்ட லாபம் ரூ.862.84 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.933.34 கோடியாகவும் இருந்தது.

இரண்டாவது காலாண்டில் நிறுவனம் வழங்கிய ஒட்டுமொத்த கடன் ரூ.6,457 கோடியிலிருந்து 35 சதவீதம் அதிகரித்து ரூ.8,706 கோடியை எட்டியது.

2021 செப்டம்பா் 30 நிலவரப்படி நிறுவனம் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு ரூ.74,471 கோடியிலிருந்து ரூ.75,063 கோடியாக அதிகரித்துள்ளது என சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.