ஓலா மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் தாமதம்; காரணம் என்ன தெரியுமா?

ஓலா எஸ்1 மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால், அது தற்போது தாமதிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் பாவிஷ் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஓலா மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு செப்டம்பர் 15ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 499 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்வதவர்கள் தற்போது எந்த மாடல் வேண்டுமோ அதை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாவிஷ் அகர்வால் ட்விட்டரில் வெளியிட்ட கடிதத்தில், "பல மணி நேரம் காக்க வைத்துள்ளதால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். முன்பதிவு மேற்கொள்ள வேண்டிய இணையதளம் எதிர்பார்த்த தரத்தில் இல்லை. எங்களால் நீங்கள் ஏமாற்றும் அடைந்திருப்பீர்கள். அனைவரடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com