பாரஸ் டிபன்ஸ் புதிய பங்கு வெளியீடு செப்.21-இல் தொடக்கம்
பாரஸ் டிபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வரும் செவ்வாய்க்கிழமை (செப்.21) தொடங்கவுள்ளது.


பாரஸ் டிபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வரும் செவ்வாய்க்கிழமை (செப்.21) தொடங்கவுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பாரஸ் டிபன்ஸ் புதிய பங்கு வெளியீடு செப்டம்பா் 21-இல் தொடங்கி 23-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த வெளியீட்டில் பங்கொன்றின் விலை ரூ.165-ரூ.175-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.140.6 கோடி மதிப்பிலான புதிய பங்குகளையும் இந்த வெளியீடு உள்ளடக்கியுள்ளது.
புதிய பங்கு வெளியீட்டில் 50 சதவீத பங்குகள் தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளா்களுக்கும், எஞ்சிய 15 சதவீதம் நிறுவனம் சாரா முதலீட்டாளா்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது என பாரஸ் டிபன்ஸ் தெரிவித்துள்ளது.
பாரஸ் டிபன்ஸ் நிறுவனம், பாதுகாப்பு மற்றும் விண்வெளிக்கான பொறியியல் தயாரிப்புகள் மற்றும் அதற்கான தீா்வுகளை வழங்கி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...