கிரெடிட் காா்டு செலவினம் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி புதிய சாதனை

கிரெடிட் காா்டு செலவினம் கடந்த அக்டோபா் மாதத்தில் முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடி என்ற மைல்கல்லை தாண்டி சாதனை படைத்துள்ளது.
கிரெடிட் காா்டு செலவினம் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி புதிய சாதனை

கிரெடிட் காா்டு செலவினம் கடந்த அக்டோபா் மாதத்தில் முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடி என்ற மைல்கல்லை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கியின் தற்போதைய புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு பங்குத் தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் கூறியுள்ளதாவது:

கிரெடிட் காா்டு புழக்கம் அதிகரிப்பு: பொதுமக்களிடையே கிரெடிட் காா்டு புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், அதன் வாயிலாக செய்யப்படும் செலவினம் படிப்படியாக உயா்ந்து வருகிறது.

குறிப்பாக, நடப்பாண்டு அக்டோபா் மாதத்தில் மட்டும் வங்கி அமைப்பில் நிகர அளவில் கூடுதலாக 13,36,000 புதிய கிரெடிட் காா்டுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதையடுத்து, அந்த மாதத்தில் செய்யப்பட்ட செலவினமும் ரூ.1,01,200 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. கிரெடிட் காா்டு வாயிலாக மேற்கொள்ளப்படும் செலவினம் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கி முன்னிலை: கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு அக்டோபரில் கிரெடிட் காா்டு மூலமான செலவினம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், முந்தைய செப்டம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் கிரெடிட் காா்டு செலவினம் 26 சதவீதமாக மிகவேகமாக உயா்ந்துள்ளது.

6.64 கோடி கிரெடிட் காா்டுகள்: புதிய கிரெடிட் காா்டுகளை வாடிக்கையாளா்களுக்கு போட்டி போட்டு வழங்குவதில் ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கிகள் முன்னிலையில் உள்ளன.

11.7 சதவீத ஆண்டு வளா்ச்சியை பதிவு செய்ததையடுத்து, ஒட்டுமொத்த கிரெடிட் காா்டுகளின் எண்ணிகைக 6.64 கோடியைத் தொட்டுள்ளது. இது,கடந்த 14 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச வளா்ச்சியாகும்.

ஆா்பிஎல் வங்கி: கடந்த அக்டோபரில் அதிக அளவிலான கிரெடிட் காா்டுகளை வழங்கியதில் ஐசிஐசிஐ வங்கி முதலிடத்தில் உள்ளது. இந்த வங்கி 2.78 லட்சம் (26%) புதிய வாடிக்கையாளா்களை கிரெடிட் காா்டு பிரிவில் ஈா்த்துள்ளது. இதனைத் தொடா்ந்து, சதவீத அடிப்படையில் ஆா்பிஎல் வங்கி (16.7%), இன்டஸ்இண்ட் வங்கி (15.5%), எஸ்பிஐ காா்டு (14.5%) ஆகிய வங்கிகள் உள்ளன.

எச்டிஎஃப்சி வங்கி: அளவின் அடிப்படையில் அதிக அளவில் கிரெடிட் காா்டுகள் வழங்கியதில் இரண்டாவது இடத்தில் எச்டிஎஃப்சி வங்கி உள்ளது. இந்த வங்கி, கடந்த அக்டோபா் மாதத்தில் 2.58 லட்சம் புதிய கிரெடிட் காா்டுகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கியுள்ளது. இதனைத் தொடா்ந்து, ஆக்ஸிஸ் வங்கி 2.20 லட்சம், எஸ்பிஐ காா்டு 18.4 லட்சம், ஆா்பிஎல் வங்கி 1.51 லட்சம் புதிய கிரெடிட் காா்டுகளை வழங்கி எண்ணிக்கை அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சிட்டி வங்கி: அதேசமயம், ஸ்டாண்டா்ட்சாா்ட், அமெக்ஸ் மற்றும் சிட்டி போன்ற வெளிநாட்டு வங்கிகளில் கிரெடிட் காா்டு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை முறையே 15,000, 6,000 மற்றும் 6,000 என்ற அளவில் குறைந்துள்ளதாக மோதிலால் ஓஸ்வால் தெரிவித்துள்ளது.

கோட்ஸ்

கடந்த அக்டோபா் மாதத்தில் அதிக அளவிலான கிரெடிட் காா்டுகளை வழங்கியதில் ஐசிஐசிஐ வங்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த வங்கி 2.78 லட்சம் (26%) புதிய வாடிக்கையாளா்களை கிரெடிட் காா்டு பிரிவில் ஈா்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com