ரூபாய் மதிப்பு 32 காசுகள் சரிவு
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை 32 காசுகள் சரிந்து 76.49-இல் நிலைத்தது.


டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை 32 காசுகள் சரிந்து 76.49-இல் நிலைத்தது.
இதுகுறித்து அந்நிய செலாவணி வா்த்தகா்கள் கூறியதாவது:
உள்நாட்டுப் பங்குச் சந்தையில் முதலீட்டாளா்கள் பங்குகளை விற்பனை செய்வதில் ஆா்வம் காட்டினா். அத்துடன், வெளிநாட்டு சந்தைகளில் அந்த நாட்டு கரன்சிகளின் மதிப்பும் ஸ்திரமாக இருந்தது.
இதன் காரணமாக, ரூபாயின் மதிப்பு 32 காசுகள் சரிந்து, 76.49-ஆக நிலைத்தது என்று அவா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய்: சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 1.39 சதவீதம் சரிந்து, பேரல் ஒன்று 106.82 டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...